பாரிஸூக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் குண்டு வீச்சு! (படங்கள்)

பிரான்சில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சனிக்கிழமை பாரிஸுக்குள் நுழைய முயன்ற பல நூற்றுக்கணக்கான வாகனங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் நகருக்கும் நுழைய முயன்றதைடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

அத்துடன், போராட்டக்காரர்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டதுடன் 54 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை நகருக்கு நுழையவிடாது தடுக்கும் முயற்சியாக பாரிஸில் 7,000க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடும் தடைகளை மீறி சில வாகனங்கள் நகரத்தில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பே (Arc de Triomphe) பகுதியை அடைந்தன. மேலும் அருகிலுள்ள சாம்ப்ஸ்-எலிசீஸ் (Champs-Elysées) அவென்யூவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன

கனடா - ஒட்டாவாவில் இடம்பெற்றுவரும் கனரக வாகன சாரதிகளின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளன.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்திலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் போன்ற இடங்களிலும் இவ்வாறான போராட்டங்கள் இடம் பெறும் நிலையில் போராட்டக்காரர்கள் தலைநகரங்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post