யாழில் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!!


யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை - அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்று பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் இன்று அதிகாலை சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது நின்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது -32) என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post