நாளைய மின்வெட்டு நேரத்தை குறைத்தது மின்சார சபை!


களனிதிஸ்ஸ உள்ளிட்ட அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிடைத்த உத்தரவாதத்தின் காரணமாக நாளை நடைமுறைப்படுத்தப்படவிருந்த 7 மணித்தியால மின்வெட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நாளை ஏ முதல் எல் வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 வரை இரண்டு மணிநேரம் 30 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி 15 நிமிடங்களும் மின்வெட்டு இருக்கும்.

அதே நேரத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை 2 மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரு மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post