ஜனாதிபதி பதவி விலகமாட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதிக்கு 69 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்பதை லக்ஷ்மன் கிரியெல்ல எமது அமைப்பாளருக்கு நினைவுபடுத்துகின்றார். ஜனாதிபதி ஒரு போதும் பதவி விலக மாட்டார் என்பதை அரசாங்கம் என்ற விதத்தில் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். இதற்கு நாங்கள் முகம் கொடுப்போம் என தெரிவித்தார்.
Previous Post Next Post