மஹிந்தவின் வீட்டிற்கு முன்னால் பதற்றம் - மக்கள் மீது தண்ணீர் தாக்குதல்! (வீடியோ)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் பொலிஸாரின் பாதுகாப்பு கடவைகளை உடைத்து மக்கள் உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post