இன்று (03) பிற்பகல் 3.30 மணிக்கு சமூக ஊடகங்களை அணுகுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வட்ஸ்அப், ருவிட்டர் ஆகிய தளங்களை அணுக முடியவில்லை.
இருப்பினும், பலர் சமூக வலைப்பின்னல்களை அணுக VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி இன்று (03) நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
நாளை காலை 6 மணியுடன் ஊரடங்கு நடைமுறை முடிவடைய உள்ளது.