
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி இன்று காலை 10 மணியளவில் அவரின் அறையைத் திறந்து பார்த்தபோதே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருச்செல்வன் நியூட்டன் (வயது 33) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.