எரிபொருள்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) என்பன இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 470 ரூபாயாகும்.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 550 ரூபாயாகும்.

இதேவேளை சிலோன் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 460 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் 520 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post