யாழில் 24 வயது இளம் ஆசிரியையின் விபரீத முடிவு!

யாழ்ப்பாணம் - கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சிவகுமாரன் நிருத்திகா (வயது 24) என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post