பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்து திருமண பந்தத்தில் இணைந்தவர் விபத்தில் சிக்கி பரிதாப மரணம்!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி சிக்கி படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த ஆ.அருள்குமார் (வயது- 34) என்பவராவர்.

பிரான்ஸில் வசித்து வந்த அவர் விடுமுறையில் வந்திருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பதாக அவருக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது. சில தினங்களில் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(03) அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீட்டிற்கு அண்மையாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவர் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (05) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் உயிரிழப்புத் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
Previous Post Next Post