யாழில் பெண்களுடன் சேட்டை விட்ட 13 பேர் கைது! (படங்கள்)

யாழ் - பருத்தித்துறை நகர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரியந்த சமரசிங்க தலைமையிலான குழுவே குறித்த 13 பேரையும் கைது செய்து எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.
Previous Post Next Post