யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ். லேனில் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு! (சிசிரிவி காணொளி)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜிபிஎஸ் ஒழுங்கையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணிடம் ஒன்றே கால் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வழிப்பறி தொடர்பான சிசிரிவி பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.

சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post