வெளிநாடு என்பது பலரின் கனவு. இக் கனவை நனவாக்கியவர்கள் 10 வீதம் என்றால், அந்தக் கனவால் அழிந்து போனவர்கள் 90 வீதம்.ஆரம்பத்தில் யுத்தம், அதன் பின் குடும்பச் சுமை அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை என வெளிநாட்டுப் பயணங்களுக்கான காரணங்களுக்குப் பஞ்சமேயில்லை.
எப்படியாவது வெளிநாடு சென்றால், தான் சார்ந்திருப்பவர்களை ஏதோவொரு வழியில் முன்னேற்றி விடலாம் என்ற நம்பிக்கையில், ஊரில் சிறுகச் சிறுகச் சேர்ந்து வைத்த அத்தனை சொத்துக்களையும் விற்றுப் புறப்படத் தயாராகின்றனர் அகதிகள் என்ற பெயரில் அப்பாவிகள்.
அவர்களை, அவர்களின் ஆசைகளைத் தூண்டி கடல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து திட்டமிட்டு ஏமாற்றும் சில குழுக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திட்டமிட்டு ஏமாற்றப்பட்டவரின் நேரடி வாக்குமூலம் கீழே காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.