
நெடுந்தீவுக் கடலில சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றினர். இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த இரு படகோட்டிகளையும கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்டைதீவைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

