யாழில் கோவிலுக்குச் சென்றவர் உயிரிழப்பு!

கோவிலுக்கு சென்றவர் கோவிலில் கால் கழுவும் இடத்தில் விழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழ்.மட்டுவிலில் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றபோது,

ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும்போது, கால் வழுக்கி விழுந்துள்ளார்.

அதன்போது பின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post