பிரான்ஸில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய மகன்! இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றாத தாய் மீது கத்திக்குத்து!!

பிரான்ஸில் மகனினால் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய தாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்ட மகன், தனது தாயார் இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்ற தகராறில் தாயாரை கத்தியால் குதித்தியுள்ளார்.

இச் சம்பவம் பிரான்ஸின் வடபகுதியில் உள்ள லின் நகரத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான குறித்த இளைஞன், 66 வயதுடைய தனது தாயை கழுத்தில் கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த தந்தையினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், படுகாயமடைந்த தாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post