யாழில் இரண்டு வயது குழந்தை உட்பட அறுவர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணம்- வடமராட்சி அல்வாய் வடக்கு பகுதியில் மது அருந்த முற்பட்டவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் அறுவர் மீது வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விலை உயர்ந்த மதுபானம் ஒன்றினை கொள்வனவு செய்து அதனை பருக முற்பட்ட வேளை அதனை பங்கிடும் போது ஏற்பட்ட முரண்பாடு முற்றியதில் இரு குழுக்களாக பிரிந்து வாள் வெட்டில் ஈடுபட்டதில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு வயது குழந்தை ஒன்றும் வெட்டுக்காயத்திற்கு உள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற 1990 நோயாளர் காவு வண்டி சேவையாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் நோயாளர் காவு வண்டிக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ப்புடைய செய்தி: 
Previous Post Next Post