மரத்துடன் கார் மோதி விபத்து! பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழப்பு!! (படங்கள்)

அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையிலிருந்து திருக்கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச்சென்ற சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சசி என தெரிய வந்துள்ளது. இவர் இந்து ஸ்வயம் சேவா சங்கத்தின் அக்கரைப்பற்று பொறுப்பாளருமாவார்.

இது தொடர்பான விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post