யாழில் 35 பேரிடம் இலட்சக்கணக்கில் சுருட்டிய வெளிநாட்டு முகவர்கள்! இளைஞர்களுக்கு கொலை மிரட்டல்!! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை அடுத்து வெளிநாடு செல்லும் முயற்சியில் இளைஞர், யுவதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு முகவர்களினால் ஏமாற்றப்பட்டு இருந்த பணத்தையும் இழந்து நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் வெளிநாடு செல்வதற்காக முகவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமார்ந்தவர்கள் அதனை மீட்டுத் தருமாறு கோரி செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் யாழ்.குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் தர்மராஜ் கலந்து கொண்டு இக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

நீர்கொழும்பைச் சேர்ந்த முகவர்களிடம், 35 பேர் சுமார் 56 இலட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், முகவர்களுடன் தற்போதும் தொடர்பில் இருப்பதாகவும் தங்களின் பணத்தை மீளத் தருமாறு கோரியபோது கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தங்களின் பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு ஊடகங்கள் ஊடாகக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post