நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் மாமனார் இயற்கை எய்தினார்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதியாக இருந்த மாவீரர் பிரிகேடியர் தீபன் மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த மாவீரர் லெப். கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை கந்தையா வேலாயுதபிள்ளை (வயது-85) காலமானார்.

யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் - வரணி பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.

6 பிள்ளைகளின் தந்தையான அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் அந்திம நிகழ்வுகள் குறித்து பின்னர் அறியத்தரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post