பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

பிரான்ஸில் குளிர்காலத்தில் மின்வெட்டு இல்லை என பொருளாதார அமைச்சர் bruno le maire அறிவித்துள்ளார். இந்தக் குளிர்காலத்தை பிரஞ்சு மக்கள் மின்வெட்டு இல்லாமல் கழிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

EDF இன் புதிய நிர்வாக தலைமை அதிகாரியுடன் பொருளாதார அமைச்சர் அணுமின் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளார்.

குளிர்காலத்தில் மின்சாரத்தை வழங்குவது தற்போது எமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக பொருளாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த மின்வெட்டினை ஏற்படுத்தமால் இருக்க தாங்கள் நம்பிக்கையுடன் உள்ளதாக EDF இன் புதிய நிர்வாக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

EDF நிறுவனம் 3 மேலதிக அணுமின் உலைகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. பராமரிப்புப் பிரச்சினைகளுக்காக 16 அணுஉலைகள் தற்போதும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post