ஜேர்மனியில் மாணவிகள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் – ஒருவா் பலி

ஜேர்மன் நகரம் ஒன்றில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் இருவர் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார்கள்.

ஜேர்மன் நகரமான Illerkirchbergஇல், காலை 7.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடினார்.

கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 14 வயதுடைய மாணவி உயிரிழந்தார், 13 வயதுள்ள மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சையளிகப்பட்டு வருகிறது.

மாணவிகளைக் கத்தியால் குத்திவிட்டு அந்த மர்ம நபர் அருகிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சென்று பதுங்கிக்கொண்டார்.

பொலிசார் அங்கு சென்றபோது அங்கு மூன்று ஆண்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் யார் குற்றவாளி என்பது தெரியாததால், அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளார்கள் பொலிசார்.

அவர்களில் ஒருவர்தான் குற்றவாளி என்று கூறியுள்ளார்கள் பொலிசார். தாக்குதலுக்கான நோக்கம் தெரியாத நிலையில், பொலிசார் அவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
Previous Post Next Post