காதலியின் அந்தரங்க வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்த நகரசபை உறுப்பினரின் மகன்!

வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து பணம் பறித்ததாக வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதியை மணம் முடிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை காட்டியதுடன், இருவரும் பகிர்ந்து கொண்ட படங்களை வைத்து யுவதியை அச்சுறுத்தி பணம் பெற்றதாகவும், தொடர்ந்து குறித்த காணொளிகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின் காதலனின் தரப்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பத்தினருக்கு முறைப்பாட்டை மீள பெறுமாறு அச்சுறுத்தல் விடப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பினூடாக அறியமுடிகிறது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post