பிரான்ஸில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு! வெறிச்சோடிக் கிடக்கும் பல்பொருள் அங்காடிகள்!!

பிரான்ஸில் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் உள்ள உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்ற அதேநேரம் குடிநீருக்கான தட்டுப்பாடும் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த காலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்ட போது விநியோக நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்ததால் உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற ரஷ்ய-உக்ரைன் போர், அதனைத் தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு போன்றன உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய-உக்ரைன் போருக்குப் பின்னர்தான் இந் நிலைமை ஏற்பட்டிருப்பதாக மக்கள் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் உணவுப் பொருட்கள் தாராளமாக எப்போது கிடைக்கும் என்பது இப்போது பிரான்ஸில் கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post