பிரான்ஸில் மருந்தகங்களில் மருந்துகளுக்குப் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மருந்தகங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
தற்போது நிலவும் குளிர்கால காலநிலை காரணமாக மக்கள் காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற உபாதைகளால் துன்படுகின்றார்கள்.
இந் நிலையில் வைத்தியர்களிடம் சென்று தங்களின் நோய்களுக்கான மருந்து வகைகளை எழுதிப் பெற்று மருந்தகங்களுக்குச் சென்றால் அங்கே குறிப்பிட்ட மருந்து வகைகள் இல்லாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது, இருமலைக் குணப்படுத்தும் சிறப் வகை மருந்துகள் மருந்தகங்களில் பற்றாக்குறையாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாராசிட்டமால், அமோக்ஸிசிலின் போன்ற மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.