முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் (22) இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் செல்வகுமார் கோபிராஜ் (வயது-25) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் அண்மை நாட்களாக சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர், யுவதிகள் என தவறான முடிவெடுத்துத் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே இவ்வாறான இள வயது தற்கொலைகள் தொடர்பில் காரணங்கள் கண்டறியப்பட்டு அதற்கான சரியான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் மருத்துவத்துறை சார்ந்தோர் உள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்தோர் இது தொடர்பில் அதீத கவனம் எடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தில் கட்டாயமாகவுள்ளது.
Previous Post Next Post