யாழில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனை மரம்! (படங்கள்)

வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக “மண்டாஸ்” புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணம் உள்பட நாடு முழுவதும் அசாதாரண காலநிலை நிலவி வருகின்றது.

“மண்டாஸ்” புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் மிதமான மழை மற்றும் அவ்வப்போது பலமாக காற்று வீசிவருகின்றது.

இந் நிலையில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை, காற்றுக் காரணமாக யாழ். ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியில் வீட்டின் அருகில் நின்றிருந்த பனை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

எனினும் உயிராபத்துக்கள் எற்படவில்லை.
Previous Post Next Post