பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி!!

பிரான்ஸில் கொரோனாத் தொற்றின் உச்சப் பரவலின் தொடர்ச்சியாக ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களின் பூஸ்டர் அலகுகளாக (rappel) பிரான்ஸின் பஸ்தர் நிறுவன ஆராய்ச்சியுடன் இணைந்த SANOFI நிறுவனத்தின் VidPrevtyn தடுப்பூசிகளை உபயோகிப்பதற்கு பிரான்ஸின் சுகாதார அதியுயர் ஆணையமான HAS அனுமதித்துள்ளது.

அத்துடன் Novavax கொரோனாத் தடுப்பூசியினையும் இந்த ஆணையம் அனுமதித்துள்ளது.

மிகவும் மோசமாக கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அடுத்த தடுப்பூசிகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post