பிரான்ஸின் முன்னணி தொலைபேசி வலையமைப்பான Orange விடுத்த எச்சரிக்கை!

பிரான்ஸில் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி பற்றாக்குறை தொலைபேசி பரிவர்த்தனைகளையும் பாதிப்படையச் செய்யும் என முன்னணி தொலைபேசி வலையமைப்பான Orange நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி Christel Heydemann இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிரான்ஸில் மின் துண்டிப்பு ஏற்படும் பட்சத்தில் அவசர எண்களுக்கு அழைப்புக்களை மேற்கொள்ளல் பாதிப்புக்குள்ளாகி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை எரிசக்தி பற்றாக்குறை தொலைபேசி பரிவர்த்தனைகளைப் பாதிப்படையச் செய்யும் என்றும் குளிர்காலத்தின் போது தொலைபேசி வலைப்பின்னல்கள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post