ஜேர்மனிக்கு வெளிநாட்டுப் பணியாளர்களை அழைக்கும் சட்டம் நிறைவேற்றம்! அவர்களுக்கான தகைமைகளும் அறிவிப்பு!!

ஜேர்மனி நாட்டுக்குப் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை என்கின்ற விடயம் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றது. அது தொடர்பான சட்டங்கள் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஜேர்மனிக்கு வெளிநாட்டிலிருந்து பணியாளர்கள் வருவதற்கு இலகுபடுத்தப்பட்டு குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் பல மில்லியன் பயிற்றப்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாலேயே இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜேர்மனியின் அமைச்சரவையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது, பயிற்றப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஜேர்மனி நாட்டுக்கு வந்து அந்த வேலையைத் தேட முடியும். குறித்த தொழிலாளர்களின் தகைமைகளை அங்கீகரிப்பதற்கான சில இணக்கப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஜேர்மனிக்கு வரும் தொழிலாளர்கள் தமது நாட்டில் இரண்டு வருட தொழில் அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அத்துடன் அவர்களது நாட்டின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்வி கற்றிருக்க வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் சொந்த நாட்டின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று பட்டதாரிகளாக வெளியேறியவர்கள் ஜேர்மனி நாட்டின் நீல அட்டைத் திட்டத்தின் அடிப்படையில் வர முடியும் என்றும் இச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post