யாழில் பேருந்தில் பெண்களுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் மீது கும்பிடக் கும்பிடத் தாக்குதல்! (படங்கள்)

பேருந்துக்குள் பெண்களுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணியளவில் யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்திர் கஞ்சா போதையில் ஏறிய 3 இளைஞர்கள் மினிவானுக்குள் பயணித்த பெண்களுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கடும் அச்சமடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் குக்குரல் இட்டு கத்தியுள்ளனர். இந் நிலையில் வான் சாரதி மற்றும் நடத்துனர் வானை நிறுத்தி விட்டு அவர்களை கீழே இறக்க முற்பட்ட போது இருவரையும் 3 இளைஞர்களும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தாக்கிக் கொண்டிருந்தவர்களிடம் தப்பித்து ஓடிய சாரதி நாவற்குழி யாழ். வளைவு அருகில் நின்றிருந்த இராணுவ சிப்பாய்களிடம் முறையிட்ட போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்காது, பொலிசாரிடம் முறையிடும்படி கூறியதாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் அந்த 3 இளைஞர்களும் அப் பகுதியால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் ஆட்டோ, அரச பேரூந்து போன்றவற்றையும் மறித்து தாக்கியதாகத் தெரியவருகின்றது. இதனால் அப்பகுதி பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந் நிலையில் அந்த வீதியால் கிரிக்கெட் விளையாடி விட்டு வந்த இளைஞர்கள் சிலர் குறித்த 3 இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்த, பொதுமக்களும் இணைந்து கும்பிடக் கும்பிட நையப்புடைத்தனர். பின்னர் பொலிஸில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Previous Post Next Post