யாழில் பட்டா வானம்-துவிச்சக்கரவண்டி விபத்து! இளைஞன் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்.காங்கேசன்துறை - மாவிட்டபுரம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(16) மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே விபத்து ஏற்பட்டது.

மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post