நேபாள விமான விபத்து! துணைவிமானியின் கப்டனாகும் கனவு சில நிமிடங்களில் தவிடுபொடியாகியது!! (வீடியோ)

நேபாளம் Yeti Airlines ஏர்லைன்ஸ் ATR 72 ரக விமானம் நேற்று காலை விபத்துக்களான நிலையில் விமானத்தின் துணை விமானியாக இருந்த (co-pilot) அஞ்சுவின் (Anju Khatiwada) வின் கனவு 20 நிமிடங்களில் தவிடுபொடியாகியுள்ளது.

விமானத்தை தரையிறக்கியவுடன் captain பதவி உயர்வு பெற இருந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி அஞ்சு கதிவாடா துணைவிமானியாகச் சென்ற கடைசி விமானம் இதுவாக அவருக்கு மாறி அவர் உலகை விட்டு பிரிந்து செல்லும் நிலையாகிவிட்டது.

விமானத்தில் தனது பயண நேரத்தை முடித்துக் கொண்டு கப்டன் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன், மூத்த விமானியும் அவரது பயிற்றுவிப்பாளரான கமல் கே.சி.யுடன் (Kamal KC) அஞ்சு கதிவாடா விமானத்தில் சென்றார்.

ஒரு விமானி ஆக, குறைந்தபட்சம் 100 மணிநேரம் பறந்த அனுபவம் தேவை. முன்னதாக நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் துணை விமானி அஞ்சு கதிவாடா வெற்றிகரமாக விபானத்துதை தரையிறங்கினார்.

விமானம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து பொக்ராவுக்கு பறக்கும் போது கப்டன் கமல் கேசி அவரை தலைமை விமானி இருக்கையில் அமர வைத்தார். வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அஞ்சு தலைமை விமானி உரிமத்தைப் பெறவிருந்தார்.

கணவரும் விமான விபத்தில் உயிரிழப்பு!

ஜூன் 21, 2006 அன்று நடந்த விமான விபத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சு கதிவாடா தனது கணவரை இழந்தார். அவரது கணவரும் ஒரு துணை விமானியாக இருந்தார், அவரும் இதே எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திலேயே இருந்தார்.

16 ஆண்டுகளுக்கு முன்பு, எட்டி ஏர்லைன்ஸ் 9N AEQ விமானம் நேபால் கஞ்சிலிருந்து சுர்கெட் வழியாக ஜும்லாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது, இதில் ஆறு பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஞ்சுவின் கணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விதிவிலக்கான நேற்றைய விமானத்தில் இருந்த கப்டனுக்கு 35 வருட விமானி அனுபவம் இருந்தது. கமல் KC கடந்த காலத்தில் பல விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார், அவரால் பயிற்சி பெற்ற விமானிகள் இன்று வெற்றிகரமான விமானிகளாக அறியப்படுகிறார்கள்.

இதேவேளை நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு காலை 10.33 மணிக்கு பறந்து. இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது. இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

நேபாள விமானங்கள் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இவ்வாறான நிலையில் தற்போது விமான விபத்து ஏற்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய மலை வழிகாட்டிகள் குழு தீவிர தேடுதலின் பின் பிறகு விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டுள்ளனர். இது ஆய்வுக்காக காத்மாண்டு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆய்வுக்குப் பிறகு விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.

யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று (15.01.2023), 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது.

அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில், 68 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகள் முன்னர் பதிவான காட்சிகள்..
Previous Post Next Post