பரிசில் மக்கள் கூடும் இடங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு!

பரிசில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் கூடும் பல்வேறு பகுதிகள் மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.

குறிப்பாக பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் போன்றன இன்று திங்கட்கிழமை நண்பகல் முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் மணிக்கு 110 கி. மீ வேகத்தில் பயல் வீசும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக இப்பகுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு நாளை காலை வரை இயற்கை அனர்த்தம் காரணமாக ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post