சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு!

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (வயது-33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இளைஞனின் தற்போதைய நிலை குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்.
Previous Post Next Post