முன்னாள் காதலியின் அந்தரங்கப் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த யாழ். பல்கலை மாணவன்!

தனது முன்னாள் காதலியின் புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த யாழ்ப்பாண பல்கலைகழக்கழக மாணவர் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு, படங்கள் அழிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் வீதியில் செல்லும் போது சில இளைஞர்கள் பாலியல் சேட்டையில் ஈடுபடுவதாக சில மாதங்களின் முன்னர் புகார் எழுந்திருந்தது. வீதியோரம் நிற்கும் சில இளைஞர்கள் சிலர் மர்ம உறுப்புக்களை காண்பிப்பதாகவும், இதனால் மாலை வேளைகளில் மாணவிகள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளதாகவும் முறையிடப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, பொலிசார் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் கண்காணிப்பு, ரோந்தை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (22) மாலை பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் ரோந்து சென்ற பொலிசார், பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு முன்பாக நின்ற இரண்டு இளைஞர்களில் சந்தேகமடைந்து, அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பரிசோதித்த போது, ஒருவர் முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.

இணைய வழி உரையாடலின் போது காதலியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததுடன், காதல் முறிவடைந்ததும் அந்த புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து, எச்சரிக்கப்பட்டு, அந்தரங்க காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இரண்டு மாணவர்களும் எச்சரிக்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Previous Post Next Post