பரிசில் நடந்த பேரணிக்குள் மேலாடைகளின்றிப் புகுந்த பெண்கள்! (காணொளி)

நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் இடம்பெற்ற அமைதிப் பேரணி ஒன்றுக்குள் Femen அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மேலாடைகளின்றிநுழைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெண்களுக்கு ஏற்படும் முதுமை மற்றும் கருணைக் கொலை தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாக பேரணி ஒன்று இடம்பெற்றது. இந்த பேரணிக்குள் திடீரென Femen அமைப்பைச் சேர்ந்த ஆறு பெண்கள் உள்நுழைந்துள்ளனர்.

வெள்ளை நிறை கால்சட்டை அணிந்திருந்த குறித்த பெண்கள் தங்களது உடைகளில் இரத்தம் போன்ற சாயத்தினை பூசியிருந்தனர். கருக்கலைப்புக்கு ஆதரவாக அவர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
Previous Post Next Post