யாழில் திருமணம் செய்து 3 மாதங்களில் இளம் குடும்பத்தர் விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளம் குடும்பத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ் விபத்து சம்பவம் கடந்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது.

அன்றைய தினம் சகோதரனுடன் மோட்டார் சைக்களில் பயணம் செய்யும் போதே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சம்பவத்தில் தெல்லிப்பளை கிழக்கு, குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சஜந்தன் (வயது- 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த குடும்பஸ்தர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post