யாழில் சோகத்தை ஏற்படுத்திய இருவரின் உயிரிழப்பு!

வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் லலித்குமார் வயது 44 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் நேற்றைய தினம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்த குறித்த பெணுக்கு பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் உயிரிழந்துள்ளார்.

புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த கலைவண்ணன் சுபாசினி வயது 24 என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவ்விருவரின் உயிரிழப்புக்கள் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post