கடந்த சில வாரங்களிற்கு முன்பு பிரான்ஸில் காணாமல் போனதாக குடும்பத்தராலும், பொலீஸாராலும் தேடப்பட்ட சிவசுப்பிரமணியம் சபேசன் என்பவர் தற்போது உயிரோடில்லை என்ற தகவலை அவருடைய குடும்பத்தார் அறியத் தந்திருக்கின்றார்கள்.
பிரான்ஸ் - பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இல் து பிரான்ஸ் பிராந்தியத்தின் வில்யுப் நகரில் வசித்து வந்த 41 வயதான சிவசுப்பிரமணியம் சபேசன் என்பவரே காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போனவரின், மனைவி பிள்ளைகள் யாழ்ப்பாணம், மல்லாகத்தில் வசித்து வரும் நிலையில், தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் மக்களிடம் மனைவி கோரிய நிலையிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
வதிவிட விசா கிடைக்காத நிலையில், குறித்த நபர் பல தமிழ் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன நபர் இறுதியாக தான் இருந்த வீட்டு உரிமையாளருடன் முரண்பட்டு விட்டுச் சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.