புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 40ற்கும் அதிகமானோர் பலி!

இத்தாலியில் படகு விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த சுமார் 80 குடியேற்றக்காரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு இத்தாலிய கடலோர நகரமான குரோடோன் கடல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இன்று (26) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சுமார் 43 பேர் உயிரிழந்தமை மீட்புப் பணியாளர்களினால் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டமை காரணமாக படகு கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்புப் பணியாளர்களின் தகவல்படி 43 உடல்களை மீட்டதாகவும், மேலும் மூன்று பேர் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post