முல்லைத்தீவில் நகைக் கடை உரிமையாளர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நகை கடை உரிமையாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இவர் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் அமைந்துள்ள காட்டு அந்தோனியார் கோவிலுக்குள் சடலமான நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் வழமையாக காட்டு அந்தோனியார் கோவிலுக்கு சென்று வருவதாகவும் இன்று (03) காலையும் கடையினை திறக்கவந்து விட்டு கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி விட்டு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை. இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Previous Post Next Post