யாழில் திலீபனின் நினைவுத் தூபியின் முன்பு திருமணம் செய்த தம்பதியினர் (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன்பு புதுமணத் தம்பதிகள் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தா தமிழ்ஈசன் மற்றும் போசிந்தா ஆகியோரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

மணமகனாக தமிழ்ஈசன் தனியார் துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

அவர்களது திருமணத்திற்கு சமூக ஊடகங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் பெருகுவதோடு அவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Previous Post Next Post