
இச்சம்பவம் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 22 வயதுடைய சந்தேக நபரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சிறுமியான குறித்த தங்கை கர்ப்பமடைந்த நிலையில் அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினருக்கு வைத்தியசாலை காவல்துறையினரால் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும், தங்கை கர்ப்பம் அடைந்ததற்கும் தனக்கும் தொடர்பில்லை என சந்தேக நபர் கூறி வந்த நிலையில், காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.