
முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்தவர்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் முச்சக்கர வண்டி பகுதி அளவில் தீயில் எரிந்து சேதமாகி உள்ளது.
கந்தசாமி ஜெகரூபன் என்பவரது முச்சக்கர வண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்