மதுபோதையில் நண்பர்களுக்கிடையில் மோதல்! இளைஞன் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை!! (படங்கள்)

வவுனியா - பூவரசங்குளம் மணியர்குள பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் (09) மாலை மதுபோதையில் நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர் ஒருவரின் சடலம் குளத்தருகில் காணப்படுவதாக பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டது. அதற்கமைய, பொலிஸாரால் நேற்றிரவு முதல் குறித்த சடலத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சடலத்தை பதில் நீதிபதி த. திருவருள் இன்று பார்வையிட்டிருந்ததுடன், சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டார்.

கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூவரசங்குளம் - நித்தியநகரை சேர்ந்த 28 வயதான இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post