க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post