மகளுக்குப் பூப்புனித நீராட்டு விழா செய்ய வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஜேர்மனிக்கு...!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து வருகை தந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த பெண்ணும் அவரது சகோதரனும் மோட்டார் சைக்கிளில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு எதிர்வரும் தினங்களில் பூப்புனித நீராட்டு விழா செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றிருறந்தது.

உயிரிழப்பு தொடர்பில் கணவனுக்கு தெரியவந்ததையடுத்து தனது மனைவியின் சடலத்தினை ஜேர்மன் நாட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அவரின் இறுதி நிகழ்வுகள் ஜேர்மனியில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் போது சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 வயது சறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

இவர் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்வதற்காக சொந்த இடமான முல்லைத்தீவு – சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post