யாழில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு!

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையினுள் அவர் இவ்வாறு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவதில் இரவீந்திரராசா கிருபாகரன் வயது 24 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

இதேவேளை வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார்.

உடுப்பிட்டி நாவலடி பகுதியைச் சேர்ந்த அரியரத்தினம் சிவகாந்தன் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு இளைஞர்களின் உயிரிழப்புக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post