விறகு ஏற்றி வந்த லான்ட் மாஸ்ட்டரில் சிக்கி 4 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குயிருப்பில் லான்ட் மாஸ்ட்டரில் ஏற்றி வரப்பட்ட விறகு தாக்கி 04 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று 1.40 மணியளவில் கைவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை முடித்து வந்த றிவ்விகா என்ற 4 வயதுச் சிறுமி அயல் வீட்டுக்காரர் செலுத்திய லான்ட் மாஸ்ட்டரில் இருந்த விறகு தாக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைவேலி பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி முன்பள்ளியிலிருந்து வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற லான்ட் மாஸ்ட்டரை பின்னோக்கி எடுக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது சிறுமி லான்ட் மாஸ்டரின் பின்பக்கமாக வந்துள்ளதாக கருதப்படுகிறது. சிறுமி நிற்பதை அறியாத அயல் வீட்டுக்கார், லான்ட் மாஸ்டரை பின்பக்கமாக செலுத்தி, மீண்டும் வீட்டுக்குள் செலுத்தியுள்ளார்.

வீட்டுக்குள் லான்ட் மாஸ்டரை திருப்பிய போதுதான், பின்னால் சிறுமி இரத்த வெள்ளத்தில் வீழ்ந்திருந்தை கண்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுமியின் தாயாரும், மற்றொரு பெண்ணும் சிறுமியை தூக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும், சிறுமி தாயாரின் கைகளிலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் தலை, காது, கால்களிலிருந்து இரத்தம் வழிந்தபடியிருந்தது.
லான்ட் மாஸ்டரில் ஏற்றப்பட்ட விறகு தாக்கியதால் சிறுமி உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. எனினும், லான்ட் மாஸ்டர் சிறுமியை தாக்கவில்லையென்பது உறுதியாகியுள்ளது. உல் கூற்றாய்வு அறிக்கையின் பின்னரே மேலதிக விபரங்கள் தெரிய வரும்.

லான்ட் மாஸ்டரின் உரிமையாளரான குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post